நாளை முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை 401 ஆக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கமாக 147 சேவைகள், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக 60 சேவைகள், கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக 136 சேவைகள், கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் 52 சேவைகள் இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்று கூறியுள்ளது.