Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னும் முடியவில்லை… எல்லாரும் உஷாரா இருக்க… சென்னை மக்களுக்கு எச்சரிக்கை ..!!

கொரோனா தொற்று முழுவதும் நீங்காததால் மக்கள் இன்னும் சில மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பணியானது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையமானது அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்துவைத்தார். அதன் பின்னர் கண்காணிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்ததோடு, அப்பணிகளை எவ்வாறு துரிதமாக செயல்படுத்துவது என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து நிருபர்களிடம் பிரகாஷ் கூறும் பொழுது, தமிழக அரசு ஒத்துழைப்புடன் சென்னை மாநகராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் திடக்கழிவு வேளாண்மை பணிகளை செய்து வருகிறது. இதற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை எடுக்கும் பொருட்டு  100 முதல் 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் என்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிசுமையானது குறைந்ததால் குப்பைகளை அகற்றும் பணியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் யார் வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள், வேறு எந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ளன என்பதை இந்த கண்காணிப்பு மையத்தின் மூலம் தெரிந்துகொண்டு உடனடியாக சரி செய்யப்படும். அதோடு ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு குப்பைகளை சேகரிக்கிறார் போன்ற தகவல்களையும் இணைய இணைப்பின் மூலம் கண்காணிக்கலாம். இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா முழுவதும் நீங்காத இச்சமயத்தில் இன்னும் இரண்டு மாத காலமாவது பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை திரையரங்குகளில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளார். அதன் பின் ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் திரையரங்கை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதில் சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் திவ்யதர்ஷினி, மண்டல அலுவலர் சீனிவாசன், துணை கமிஷனர் ஆல்பி ஜான், இன்ஜினியர்கள் ராஜசேகர் மற்றும் முரளி போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |