Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… சிக்கிய சிசிடிவி காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். மாதந்தோறும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகளும் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பாக உண்டியலை திறந்து அதில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் சேர்ப்பதை அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு காலையில் பூசாரி மற்றும் பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |