இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.
சினிமா படப்பிடிப்புகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது . தற்போது கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது . ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர் .
அங்கு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறைகளில் இருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓட்டல் அறைக்கு தான் செல்ல வேண்டும் . இதற்கு இடையில் வேறு எங்கும் பயணிக்கக் கூடாது. படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து விட்டால் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டுதான் வெளியே செல்ல வேண்டும் என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .