Categories
சினிமா தமிழ் சினிமா

‘விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும்’…D43 படம் குறித்து தனுஷ் போட்ட ட்வீட்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என ட்விட்டரில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட், பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது ‌. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இந்தப் படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்தது.

மேலும் நேற்று நடந்த படப்பிடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி இயக்கத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது . இது நடிகர் தனுஷின் 43 வது படம் என்பதால் தற்சமயம் D43  என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் D43 படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் . விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |