Categories
தேசிய செய்திகள்

பறவைக்காய்ச்சல் பீதி…. முட்டை இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்…. மருத்துவர்கள் அறிவுரை…!!

முட்டையை அரைவேக்காட்டில்  சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் மக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்ததாக பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் முட்டை மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முட்டையில் ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லேட் என அரைவேக்காட்டு சாப்பிடாமல் நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டையை வேக வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக இருக்க வேண்டும். அது தண்ணீர் போல உடைந்து ஒழுகினால்  அந்த முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Categories

Tech |