Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்..! ”இன்னும் 2மாசம் இருங்க ” சென்னை மக்களுக்கு அலர்ட் …!!

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். அதன்பின் அங்கு நடந்து கொண்டிருந்த பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அப்பணிகளை எப்படி விரைவாக செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

அதன் பின் மாவட்ட ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இனி தெருக்களில் குப்பைகள் எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு முன்பு போல் சைக்கிள் மற்றும் ரிக்க்ஷா வண்டிகள் இல்லாமல் இப்பொழுது பேட்டரி வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 100 முதல் 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் தரப்பட்டுள்ளது. இதனால் வேலை சுமை குறைந்து குப்பைகளை அகற்றும் பணியும் விரைவில் முடியும்.

கொரோனா ஆபத்து இன்னும் முடிவடையவில்லை.அதற்கு இன்னும் இரண்டு மாத காலமாவது ஆகும். அதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது.கொரோனா தொற்று உள்ளபகுதிகளை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.

 

Categories

Tech |