Categories
தேசிய செய்திகள்

சேலையை கட்டிக்கொண்டு…. செமையாக அந்தர் பல்டி அடிக்கும் பெண்…. வைரல் வீடியோ…!!

ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் புடவையை கட்டிக்கொண்டு அந்தர் பல்டி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பருல் அரோரா. இவர் தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் அண்மையில் புடவையை கட்டிக்கொண்டு செமையாக ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக புடவை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது கடினமான வேலை ஆகும். ஆனால் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அரோரா புடவை கட்டிக்கொண்டு அந்தர் பல்டி அடித்து அசத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ  இணையத்தில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/i/status/1347195182484082695

Categories

Tech |