Categories
டெக்னாலஜி

சிக்னல் மெசேஜிங்க்கு மாறிய…. வாட்ஸ்அப் பயனர்கள்…. அப்படி என்ன அதுல இருக்கு…!!

வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் தற்போது சிக்னல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்தும் ஒரே செயலி என்றால் அது வாட்ஸ்அப் மட்டும் தான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பை பயனர்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தங்களின் சுயவிவரங்களை பதிவிடுமாறு வற்புறுத்தி வருகின்றது. வாட்ஸ்அப்பை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014ல் வாங்கியது. பின்னர் எண்டு டூ எண்டு என்கிரிப்ஷன் மூலமாக 2016 ஆம் வருடம் பிரபலமானது.

இந்நிலையில் சிக்னல் மெசேஜிங்க் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் விடவும் இதில் அதிகளவான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாட்ஸ் அப் போலவே வீடியோ, ஆடியோ, போட்டோ மற்றும் குரூப் மெசேஜ் வசதியும் இதில் உள்ளது. மேலும் இதில் பாதுகாப்பு அம்சங்களும் அதிகம் என்பதால் பயனாளர் அதிகமாக சிக்னல் மெசேஜிங்கை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலோன் மஸ்கும் சிக்னல் செயலியை பயன்படுத்ததொடங்கியுள்ளார்.

Categories

Tech |