Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வரின் சொந்த….. எடப்பாடி சட்டமன்ற தொகுதி….. ஓர் பார்வை …!!

எடப்பாடி தொகுதியின் அம்சங்களும், தொழில்கள் ,நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள்  

பாலங்கள் நிறைந்த சேலத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்தத் தொகுதியான எடப்பாடி சேலம் மாவட்டத்தில்  இரண்டாவது பெரிய நகரமாகவும் எடப்பாடி உள்ளது. 1951ஆம் ஆண்டு எடப்பாடி ஆனது சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது அதிலிருந்து பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளது அதில் அதில் நான்கு தேர்தல்களில் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

விவசாயமும் நெசவுத் தொழிலும் தான் இந்த பகுதியின்  பிரதானமாக தொழில்களாக இருக்கிறது. காவிரியாறு ஓடக்கூடிய எடப்பாடி பகுதியில் சுற்றிலும் ஏரிகளும், குளங்களும் உள்ளன. குறிப்பாக அரிய வகை பாறைகள் உள்ளன. காவிரி நதிக் கரையோரம் அமைந்துள்ள எடப்பாடி தொகுதியில் நெசவும், விவசாயமும் பிரதான தொழில்கள். கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி  மற்றும் சுடிதார் மெட்டீரியல்கள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

துண்டு கைலி மற்றும்  சுடிதார் தயாரிப்பில் 30 ஆயிரம் குடும்பங்களும், கைத்தறி விசைத்தறி பட்டு நெசவில் 20,000 நெசவாளர் குடும்பங்களும் ஈடுபட்டுள்ளன. இங்கு சிறு குறு விவசாயம் முக்கிய தொழில்களாக விளங்குகின்றது. மாங்காய் மற்றும் தென்னை சுமார் 8000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். பனை,வாழை, நெல், கரும்பு மற்றும்  சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்கின்றனர். ஜலகண்டபுரம் நங்கவள்ளி பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் மாம்பழங்கள் விளைகின்றன.

உழவும், நெசவும் பிரதான தொழில்களாக உள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொழில்பேட்டை அமைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.காவிரி கரையோரம் சுற்றுலாத்தலமாக விளங்கும் பூலாம்பட்டியில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க வேண்டும். பூலாம்பட்டிலிருந்து ஈரோடு  மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வேண்டும் போன்ற  கோரிக்கைகள் இத்தொகுதியில் உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நங்கவள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விடுதி கட்டப்பட்டுள்ளது. எடப்பாடியில் துணை நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. 5 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியில் வட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடியில் இருந்து பெங்களூருக்கு நேரடி பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.நெசவுத் தொழிலின் கேந்திரமாக கருதப்படும் எடப்பாடி தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ப பிரதானமாக இடம் பெற்ற இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது நெசவாளர்களின் கருத்தாக உள்ளது.

1951ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில்,

அதிமுக 6 முறையும்,

பாமக 3 முறையும்,

திமுக 2 முறையும் ,

காங்கிரஸ் கட்சி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் நான்கு முறை எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |