Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போடு… இனி என்ன கவலை…! அதான் திறந்தாச்சுல்ல…! திருப்பத்தூர் மக்கள் உற்சாகம் …!!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வீரமணி சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் மையத்தை அமைச்சர் வீரமணி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன கருவிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளோம். அதேபோல், தற்போதும் அதி நவீன சிடி ஸ்கேன் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இக்கருவி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தான் மகப்பேறு அதிக அளவில் நடைபெறுகிறது. கூடிய விரைவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். திருப்பத்தூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் விரைவாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |