இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் இன்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்கால் கொடுத்தால் கேஸ் புக்கிங் ஆகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய இணைப்புகளுக்கு 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் தரலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.