எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது. இதனை மொபைல் மூலமே பெறலாம்.
ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன் வட்டி விகிதம் இந்திய வங்கித் துறையில் மிக குறைவானதாக உள்ளது. தற்போது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் அதிகமான சலுகைகளை வழங்குவதற்காக,நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ள எஸ்பிஐ நுகர்வோர் உணர்வுகளை ஊக்கம் அளிப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாகவும், வீடுகளில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
எஸ்பிஐ நிறுவனத்தின் எம்டி சி எஸ் செட்டி பேசுகையில் நோய்த்தொற்று காரணமாக, நாடும் முடங்கி இருந்த நிலையில், இனி முன்னேறி செல்ல நாடு தயாராக உள்ளது. அதற்கு எஸ்பிஐ வீடு வாங்குபவர்களுக்கும், ரியல் எஸ்டேட் துறைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில் இது போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இதை அறிவித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்தார். இந்த சலுகை மார்ச் 21 வரை செல்லுபடியாகும். எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.80 சதவீதத்திலும், ரூ.30 லட்சத்துக்கு மேலான கடன்களுக்கு 6.95 சதவீதத்திலும் வட்டி விகிதங்கள், 8 மெட்ரோ நகரங்களில் ரூ.5 கோடி வரை கடன்களுக்கு 30 bps வரை வட்டி சலுகைகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே YONO App அல்லது https://homeloans.sbi / www.sbiloansin59minutes.com ஆகிய வலைத்தளங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து 5 bps கூடுதல் வட்டி சலுகையைப் பெறலாம். இந்த கடன் சிபில் ஸ்கோர் அடிப்படையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.