Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடரும் அவலம்…. ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால்…. வாலிபர் தற்கொலை…!!

 

ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர் எல்வின். இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் விளையாட்டில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதையடுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையி,ல் அடையாளம் தெரியாத நிலையில் காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை அனைத்து காவல்நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதன்படி கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் இந்த புகைப்படம் ஒத்து போயுள்ளது. இதையடுத்து உடற்கூறாய்வுக்காக அவருடைய உடல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரம்மி விளையாடிட்டில் பணத்தை இழந்ததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

Categories

Tech |