கொரோனாவில் இருந்து தப்பிக்க நபர் ஒருவர் மொத்த விமான டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவும் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் முல்ஜாடி என்ற நபர் கொரோனாவில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார்.
இதனால் தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தன் மனைவியுடன் பயணிக்க இருந்த அவர் எங்கே மற்றவர்களுடன் விமானத்தில் பயணித்தால் கொரோனா பரவி விடுமோ என்று நினைத்து மொத்த விமான டிக்கெட்டுகளை தானே புக் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.