Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமி… குப்பை கிடங்கில் வைக்கப்பட்ட தீ… விளையாட்டு விபரீதமான சோகம்..!!

பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்தி அருகே கோனூர் பார்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவருக்கு கௌஷிக் என்ற மகனும், வித்யபாரதி என்ற மகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று பூபதி வேலைக்கு சென்ற நேரத்தில் கௌஷிக் மற்றும் வித்யா பாரதி அருகில் உள்ள குப்பை வைக்கப்பட்ட தீ அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையிலிருந்து தீ சிறுமியின் உடையில் பிடிக்கவே மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அந்த குழந்தை சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

இதனை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கவனமுடன் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |