Categories
தேசிய செய்திகள்

பரவும் பறவை காய்ச்சல்…. கோழிகளின் வாயில் ரத்தம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!

ஆந்திராவில் கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து உயிரிழந்தது பறவைக்காய்ச்சலா என்ற அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது . 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சந்திரகிரி மல்லையபல்லி கிராமத்தில் 500-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அதிகமான கோழிகளை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையன்று கோழிகளை 500 முதல் 600 வரை விற்பனை செய்யும் முடிவில் இருந்தனர். இந்நிலையில் சில நாட்களாக கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து இறந்தது. இதனால் கிராமத்து மக்கள் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் இறந்ததா என்ற அச்சத்தில் உள்ளனர்.

பின்னர் இதுகுறித்து கால்நடைத் துறை மருத்துவர்களுக்கு கிராமமக்கள்  தகவல் தெரிவித்தனர்.    கிராமத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் இறந்த கோழிகளை  பரிசோதனை செய்ததில் அவை பறவைக்காய்ச்சலில்  இறக்கவில்லை என தெரியவந்தது. எனினும் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து அதிகமான கோழிகள்  இறந்ததால் கிராமத்து மக்கள் அதிர்சிச்சியில் உள்ளனர். கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் ஆந்திராவிலும் பரவியிருக்கும் என்ற அச்சம் அக்கிராமத்துமக்கள்  மனதில் நிலைத்துள்ளது.

Categories

Tech |