Categories
மாநில செய்திகள்

 மத்திய அரசு பொதுத்துறையில் “தமிழருக்கே வேலை” சட்டம் இயற்ற வைகோ வேண்டுகோள்..!!

 மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று வைகோ தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்தே வாட்டி வதக்கி வருகின்றது.இதனால் படித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வட மாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது நாம் அறிந்ததே . இந்நிலையில் தற்போது மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை தேர்வு செய்திருப்பது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுப்பணிகள் மற்றும் மத்தியஅரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |