Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதற்றம் இல்லாமல்….. ரூ 60,00,000 வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி….. 5 பேர் கைது….!!

வெளிநாட்டு பணத்தை சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் கடத்த முயன்ற ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் இருந்து துபாய்க்கு இண்டிகோ ஏர்வேஸ் விமானம் ஒன்று அதிகாலை 5:3௦ மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து போலீசார் சந்தேகப்படும்படியான நபர்களை தனியாக அழைத்து விசாரித்ததில் அவர்களிடம் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், துபாய் ரியால் ஆகியவை உரிய ஆவணமின்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து வெளிநாட்டு பணத்தை கடத்திய குற்றத்திற்காக காவலார்கள் 5 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் எந்த காரணத்திற்காக அவர்கள் வெளிநாட்டு பணத்தை கடத்தி சென்றார்கள் என்பது குறித்த விரிவான விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள். சாதாரணமாக மற்ற பயணிகளோடு பயணிகளாக எந்த வித பதற்றமும் இல்லாமல் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |