Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோன 7,64,000 ரூபாய்… மன உளைச்சலில்… இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகப்படியான ஆர்வமிருந்துள்ளது. இதனால்  அதிகளவு பணத்தை சூதாட்டத்தில் விளையாடி இழந்துள்ளார்.மேலும்  தமிழ்நாடு அரசு இணையதளம் சூதாட்டத்தை தடை செய்த பிறகும் சட்டவிரோதமாக அதை பதிவிறக்கம் செய்து விளையாடி உள்ளார்.

இதில்  கடந்த 4ஆம் தேதி வரை சுமார்  7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வரை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளான எல்வின் பிரட்ரிக்  திருப்பூருக்கு வந்து திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்  ரயிலில் பாய்ந்து தற்கொலை  செய்து கொண்ட  நிலையில்  அவர் யாரென்று அடையாளம் தெரியாததால்  காவல்துறையினர் அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பினர்.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் ஒத்துப் போயிருந்த நிலையில் காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |