Categories
சினிமா தமிழ் சினிமா

உயிருக்குப் போராடும் நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

உயிருக்கு போராடும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த பாரதிராஜா கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னுயிர் தோழன்’. இந்த படத்தில் பாபு, தென்னவன், ரமா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் முதலாக இந்தப் படத்தில் அறிமுகமான நடிகர்  பாபு தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இதையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பாபுவிற்க்கு எதிர்பாராத விதமாக வாழ்வில் ஒரு சோதனை ஏற்பட்டது.

https://twitter.com/kayaldevaraj/status/1347793599757307907

‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது மாடியில் இருந்து குதித்த பாபுவிற்கு முதுகில் அடிபட்டது . தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த பாபு அதன் பின் எழுந்து நடமாட இயலவில்லை. இருபது வருடங்களாக படுத்த படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார் .சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிகர் பாபுவின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது தன் நிலையை எடுத்துச் சொல்லி உதவி கேட்ட பாபுவை பார்த்து பாரதிராஜா கண்கலங்கிய வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |