வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இதற்கான மாதிரி சோதனை என்பது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்தார். இன்றைய தினம் மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களிடம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை எப்படி மேற்கொள்வது ? என்பது சம்பந்தமாக ஆலோசனை ஈடுபட்டிருந்தார்.
வரும் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் விநியோகம் உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருப்பது தொடர்பான பல்வேறு விஷயங்களை கலந்தாலோசிக்க உள்ளார். இந்த நிலையில் 16ம் தேதியிலிருந்து தடுப்பூசி போடப்பட கூடிய மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கான அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே விமானங்களின் மூலமாகவும், பயணிகள் விமானத்தின் மூலமாகவும் கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரிய பெரிய கண்டைனர் வழியாக இந்த தடுப்பூசியை எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்வது சற்று சிரமமான விஷயம், எனவே அங்கு கூடுதலான கண்காணிப்பு போடப்பட்டிருக்கிறது. தமிழகம் மிக அதிகமாக கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக இருப்பதன் காரணமாக அதிக முக்கியத்துவம் வழங்கப் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வரும் திங்கள்கிழமை மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்யும் போது மாநில முதல்வர்கள் முதல் கட்டமாக தங்கள் மாநிலத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படும் ? என்ற விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. அது மிகவும் சுலபமான விஷயம். ஏனென்றால் அதற்கான கட்டமைப்பு என்பது மிகத் தெளிவாக இருக்கும். கிராமங்களில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு சென்று சேர்வதுதான் சற்று சிரமமான விஷயம்.