இயக்குனர் முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இந்த வருடம் பொங்கல் விருந்தாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் ,சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படமும் ஜனவரி 14-ஆம் தேதி ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் மிகப்பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதேபோல் பூமி திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
இந்நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் டிவியில் ரிலீசாக இருக்கிறது. நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை லட்சுமிமேனன் நடிப்பில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல் சமீபத்தில் ‘நாங்க ரொம்ப பிஸி’ படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது .