தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி சபதம் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபதம் எடுத்துள்ளார். மேலும் ஆளுநரிடம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்ற விமர்சனம் செய்துள்ளார். மேலும் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். வெளிநாடுவாழ் இந்தியர்களின் வாக்குகளும் மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.