அரியலூர் மாவட்டத்தில் சிம்புவை சிவனாக சித்தரித்து STR நற்பணி இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் “நீ அழிக்குறதுக்காக வந்த அசுரன்னா… நான் காக்குறதுக்காக வந்திருக்க ஈஸ்வரன் டா” என்று சிம்புவின் பஞ்ச் வசனத்துடன் ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியானது.
இந்தப் பஞ்ச மூலம் நடிகர் தனுஷை சீண்டும் சிம்பு சீண்டுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட STRநற்பணி இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் சிம்புவை சிவனாக சித்தரிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.