இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி மாரடைப்பு ஏற்பட காரணம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கடந்த 2ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதன் பிறகு அவர் உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் என எதுவும் இல்லாத, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி மாரடைப்பு ஏற்பட காரணம் இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் வால்வுகளிள் மூன்று அடைப்புகள் இருந்ததுதான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அனைத்து இந்தியர்களுக்கும் எளிதில் வரக்கூடிய பிரச்சனை என்றும் தெரிவித்தனர். மேலும் அனைவரும் உடல் ஆரோக்கியம் இருந்தாலும் சரி வர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.