Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் இவர் தான் … வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இன்று வார இறுதி என்பதால்  நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ‘இன்னும் ஒரு வாரமே உள்ளது இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார்’ என கமல் அதிரடியாக பேசியிருந்தார் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் சேகர் வெற்றி பெற்றுள்ளார் . அவருக்கு போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து கோல்டன் டிக்கெட்டை வழங்குகின்றனர். இதையடுத்து சோம் அவரது தாயாருடன் வெப்கேமரா மூலம் உரையாடுவது போன்று ப்ரோமோ நிறைவடைகிறது.

Categories

Tech |