ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்து நீக்கப்படும் வீரரின் பெயர் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடக்கும். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் 8 அணிகளும் தங்களுடைய அணியிலிருந்து அணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் நீக்கப்படும் வீரர்களை முடிவு செய்து ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் 8 அணிகளும் தங்களுடைய அணியிலிருந்து நீக்க இருக்கும் வீரர்களின் பெயர்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நீக்க இருக்கும் வீரர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேதர் ஜாதவை நீக்குவதாக அறிவித்துள்ளனர். மேலும் ஹர்பஜன் சிங்க், பியூஸ் சாவ்லா ஆகியோரின் பெயர்களை நீக்கவும் சென்னை அணியில் இருந்து நீக்க ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.