ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் மருதுசகோதரர்களை போல வெற்றி பெறுவார்கள் என்று வளர்மதி பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு பொதுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்த முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஒருமனதாக தீர்மானம், ஜெயலிதா நினைவிடத்தை உலக புகழ்பெற்றதாக உருவாக்கம், பொங்கல் பரிசு தொகுப்பு 2500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி உள்ளிட்ட 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலையில் கூட்டத்தில் பேசிய வளர்மதி, ராமர், லட்சுமணர்களை போல ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்துள்ளனர். மேலும் மருது சகோதரர்களை இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.