Categories
பல்சுவை

செலவுக்கு மேல சம்பளமா…? திருப்பிக் கொடுத்த தியாகி…. லால் பகதூர் சாஸ்திரி….!!

இந்தியாவில் மிக குறுகிய காலம் பிரதமராக இருந்தாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தொகுப்பு

லால்பகதூர் சாஸ்திரி, எளிமையான பிரதமர் என்பது நாடறிந்த ஒன்று. மிகவும் எளிமையாக வாழ்ந்த அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை அவரை நினைவு நாளை முன்னிட்டு இங்கு நினைவு கூறுகின்றோம். ஒருசமயம் நண்பர் ஒருவர் லால்பகதூர் சாஸ்திரியிடம் ஐம்பது ரூபாய் கடன் கேட்க, இவரோ இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் மனைவியோ தன்னிடம் இருப்பதாக சொல்ல, அதனை பெற்று தனது நண்பரிடம் கொடுத்துள்ளார்.

நண்பர் சென்ற பின் தனது மனைவியிடம் விசாரித்து பார்த்ததில் அது அவரது வருமானத்தில் மிச்சம் பிடித்த பணம் என்று தெரிந்தது. இதனைத்தொடர்ந்து கூடுதலாக கிடைத்த சம்பளத்தை திரும்பக்கொடுத்தவர் லால் பகதூர் சாஸ்திரி. இப்படி எளிமையுடன் வாழ்ந்த பிரதமரின் உலகில் தான் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு கிடைத்த பெருமை. மேலும் இவர் அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் இனிமேல் உணவில் காய்கறிகளையும், பருப்பையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என தனது மனைவியிடம் கூறினார்.

அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் இரவில் இருட்டிலேயே இருக்க பழகிக் கொண்டவர் லால்பகதூர் சாஸ்திரி. 20 மாதங்கள் இந்திராவை பிரதமராக ஆண்டாளும், கடின உழைப்புக்கும், திறமைக்கும், சிறந்த ஆளுமைக்கும் லால்பகதூர் சாஸ்திரி என்பது ஒரு பெயராகவே இருந்தது. சாஸ்திரியின் மறைவிற்குப் பின்னர், அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி வழியில் லால்பகதூர் சாஸ்திரியும் இந்திய கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலித்தார் என்றால், அது மிகையன்று.

Categories

Tech |