நாடு முழுவதும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கி வருகின்றன. இருப்பினும் ஒரு சில நாடுகளில் இதன் இரண்டாவது அலையின் தாக்கம் வீசியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முதல் கொரோனா ஜனவரி 16 ஆம் தேதி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியானது முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என்று மொத்தம் மூன்று கோடி பேருக்கும் போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து முன் களப்பணியாளர்களுக்கு அடுத்ததாக 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள சுமார் 27 கோடி பெருக்கும் தடுப்பு ஊசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.