நடிகை பிரியாமணி தெலுங்கில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் . இவர் இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் . இதையடுத்து நடிகை பிரியாமணிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தாலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை . இதன் பின்னர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் .
இதையடுத்து பல வருடங்களுக்குப் பிறகு வெப்சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு நடிகை பிரியாமணிக்கு கிடைத்தது . இதை சரியாக பயன்படுத்திய பிரியாமணி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிகை பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.