Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்..! என் ஸ்வீட் கடை பூட்டை உடைச்சுட்டாங்க…! போலீஸ் பார்த்த போது அதிர்ச்சி… ஆதாரம் சிக்கியது …!!

சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து உடனடியாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீஸார் ஷட்டரை உடைத்து கடைக்குள் சென்று கொள்ளையடித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |