சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா வீரர்களை இனரீதியாக திட்டியதாக ஆஸ்திரேலியா ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் இந்திய வீரர்கள் பும்ரா , சிராஜ் பவுண்டரி எல்லைக்கோட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்திய வீரர்களை இனரீதியாக இழிவுபடுத்திப் பேசிய தாக குற்றம் சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கேப்டன் ரகானே, அஸ்வின் அவர்களிடம் தெரிவித்தனர். நடுவர்கள் இந்த விஷயத்தை மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்க உரிய விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.