Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பிரியா பவானி சங்கர் … எதற்காக தெரியுமா ?…!!!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் மாதவனுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் நடிகை பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மாபியா , மான்ஸ்டர் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இவர் கைவசம் பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியான கதாநாயகியாக வலம் வருகிறார் ‌. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடிகர் மாதவனுக்கு டுவிட்டரில் நூறு தடவை ஐ லவ் யூ சொல்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று அமேசான் பிரைமில் வெளியான மாதவனின் மாறா திரைப்படத்தை பார்த்த பிரியா பவானி சங்கர் டுவிட்டரில் ‘நூறு தடவை ஐ லவ் யூ சொல்கிறேன். எல்லாரும் உங்களை நேசிக்கிறார்கள் . உங்கள் வேலையால் சில நேரங்களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக காட்டுகிறீர்கள் . ஆனால் பல நேரங்களில் நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் அழகாக காட்டுகிறீர்கள்’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை ரீட்வீட் செய்த மாதவன் ‘உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் ‘ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |