இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொத்துக் கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது என்று சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவு இடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. அது வரலாறு மாறாது” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.