‘அரண்மனை 3’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக நடிகை சாக்ஷி அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது . இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் அரண்மனை 3 படத்தில் ஆர்யா ,ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார் .
Dubbing completed for #Aranmanai3❤️ #sundarc sir film❤️ pic.twitter.com/ZjKKdrMUwB
— Sakshi Agarwal (@ssakshiagarwal) January 9, 2021
குஜராத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அரண்மனை 3 படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .