Categories
அரசியல் மாநில செய்திகள்

மனசாட்சியை மனதில் இருந்து பிடுங்கி எறிவோம்… முதல்வர் அதிரடி சபதம்…!!!

நம் மனசாட்சியை மனதில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் மனசாட்சியை மனதில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்துள்ளார். தேர்தலில் திட்டம் போட்டு சரியாக செயல்பட்டால் நமக்கு வெற்றி உறுதி. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை பெற வேண்டும். அதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |