திமுகவிற்கு நான் பதிலடி கொடுப்பேன் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் தேர்தலில் போட்டி விடுவேனா என்று எனக்கு தெரியாது. அதை மேலிடம் தான் முடிவு செய்யும். முதலமைச்சர் பழனிசாமியை நாங்கள் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் விதிமுறைப்படி வேட்பாளர் அறிவிக்கப்படுவர்.
முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று ஸ்டாலினிடம் தெரிவித்த பிறகும் அவர் ஏன் நிபந்தனை விதிக்க வேண்டும். நான் திமுகவில் இருந்து அரசியல் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்ததே கருணாநிதிதான். முன்பு இருந்த திமுகவிற்கும், தற்போது இருக்கும் திமுகவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.
தற்போது இருக்கும் திமுகவிற்கு கண்டிப்பாகநன் பதிலடி கொடுப்பேன்.வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழ் நாட்டு அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று கூறினார்.