டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 45 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பெருமாள்(68) என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 78 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.