தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது .
தற்போது நாடு கொரோனா பரவி வருகின்றது. இதை பயன்படுத்தி ஆன்லைனில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு எண் போன்றவற்றை பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், லிங்கை உறுதிசெய்யவேண்டும். போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். இது போன்ற மோசடிகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.