Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் “21 பேர் மீது கிரிமினல் வழக்கு” தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்..!!

மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய  அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான  இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள் 22 கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள்

இதில் 22 அமைச்சர்கள்  மீது கிரிமினல் வழக்குகளும் , 16 அமைசர்கள் பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்கள் அதிலும் அமித் ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு சுமார் ரூ.40 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |