Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“இளநரையை போக்க வேண்டுமா”..? வீட்டில் உள்ள இந்த 4 பொருளை மட்டும் பயன்படுத்துங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள்.

உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும்.

உருளைக்கிழங்கு தோல்:

நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், அதனைக் கொண்டு கூந்தல் பராமரிப்பை மேற்கொள்ளலாம். உருளைக்கிழங்கு ஸ்டார்ச் நிறைந்தது. முடியின் நிறத்தை பாதுகாக்க உதவும். உடனடி பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கு தோலை எடுத்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பிறகு அதை இறக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு தோல்  வடியும் நீரை வடிகட்டி பிறகு அதை இளநரை இருக்கும் இடத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முடியை அலச வேண்டும்.

நெய்

நெய் கூந்தல் இழக்கும் நிறத்தை மீட்டெடுக்க உதவுகிறது. முடியின் நிறத்தை பராமரிக்க உதவும். கூந்தலின் ஆரோக்கியத்தை வளர்ப்பதோடு இயற்கை நிறத்தை அளிக்கிறது. நெய்  தரமானதாக இருக்கவேண்டும். லேசாக சூடு செய்து கூந்தலில் குறிப்பாக இளம் நரை இருக்கும் இடத்தில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு வெற்றிகரமான சாயத்தை கூந்தலுக்கு தருகிறது.

காப்பித்தூள்

காப்பித்தூள் தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். உங்கள் கூந்தலுக்கு ஏற்ப 3 டீஸ்பூன் அளவு காபி தூளை எடுத்து 150ml தண்ணீருடன் சேர்ந்து கலக்கவும் .பின்னர் அதனை இறக்கி ஆற வைத்து குளிர்ந்த பிறகு கூந்தலில் உச்சி முதல் நுனி தடவி, இளநரை இருக்கும் பகுதியில் நன்றாக தேய்த்து விடவும். 50 நிமிடம் பிறகு உங்கள் கூந்தலை அலசி எடுக்கவும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்  வைட்டமின் சி நிறைந்தது. கூந்தல் பராமரிப்பில் நெல்லிக்காய் இல்லாமலா? அதிலும் இளநரையை போக்குவதில் நெல்லிக்காய் சிறந்த இடமுண்டு. முடி வளர்ச்சிக்கும், சேதமடைந்த முடியை போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது.  தலைமுடி சாயத்திருக்கு இயற்கை தந்த பொருள் நெல்லிக்காய். சுத்தமான தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் நெல்லிக்காய் பொடிசேர்த்து கொதிக்க வைத்து சூடாக்கி இறக்கவும். ஆறிய பின்பு கூந்தல் முழுக்க தலையில் இருந்து நுனி வரை தேய்த்து 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கூந்தலை அலசி எடுக்கவும். உங்களுக்கு இளம் நிறை தாக்கம் குறையும்.

Categories

Tech |