Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் அதிக அளவில் சோடா குடிக்கிறீர்களா”..? உடலுக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கும் தெரியுமா..?

கார்பனேட்டேடு பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால் நம் உடலுக்கு மன அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மக்கள் சோடா பானத்தை தான் மக்கள் விரும்பி பருகுகின்றனர்.இந்த இனிப்பு கார்பனேட்டேடு பானம்  என்றால் போதும், நம்மில் பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பமான பானமாக உள்ளது. உணவை எடுத்துக் கொள்ளும்போது சரி உணவை எடுத்துக் கொண்ட பின்னரும் சரி இந்த பானங்களை தான் அருந்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் இதன் சுவைக்கு அடிமையாகி விட்டனர் என்றே கூறலாம்.

ஆய்வு தகவல்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் படி சர்க்கரை இனிப்பு பானங்கள் அமெரிக்க உணவில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது. நியூட்ரிஷன் அண்ட் 2011 முதல் 14 ஆம் ஆண்டு வரை கண்டறியப்பட்ட புள்ளிவிவரங்களில் பத்து இளைஞர்களில் ஆறு பேர் மற்றும் 10 பெரியவர்களில் ஐந்து பேர் என சர்க்கரை இனிப்பு பானத்தைக் குடிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிகின்றது.

என்ன குடிக்கலாம்

நீர் (லெமன் ப்ளேவர், ஆரஞ்சு துண்டுகள், பெர்ரி மற்றும் வெள்ளரிக்காய்), பால், வலுவூட்டப்பட்ட பால், 100% பழ ஜூஸ் அல்லது வெஜிடபிள் ஜூஸ் . குறைவான ஊட்டச்சத்து உங்கள் உணவில் சேர்ப்பது பிற ஆரோக்கியமான பானம் மற்றும் உணவுகளை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும். இதனால் உங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

கல்லீரல் பிரச்சனை

அதிகபடியாக சக்கரை உட்கொள்ளுவது கல்லீரலில் கொழுப்பை கரைக்கின்றது. கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். இது இயற்கையாக உங்கள் உடலில் நச்சுத்தன்மை உண்டாக்குகின்றது. சோடாவில் பெரும்பாலும் அதிக பிரக்டோஸ் சோளம் சிரப் அதிகமாக உள்ளது, இது உங்கள் கல்லீரல் வழியாக செயலாக்கப்படும். இது கல்லீரலுக்கு அதிக சுமையை கொடுப்பதோடு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

இதய நோய்களுக்கு வழி வகுக்கும்

சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவை உயர்த்த வழி வகுக்கிறது. இதனால் உங்கள் இதய நோய்க்கு அதிக அளவு காரணமாகிறது. இதில் சேர்க்கப்பட்ட சர்க்கரையில் இருந்து 25 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட கலோரிகள் கொண்ட ஒரு உணவு இருதயநோய் இறப்புக்கான காரணமாக அமைகிறது.

Categories

Tech |