செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள் பற்றிய தொகுப்பு.
நம் முன்னோர்கள் காலம் காலமாக செம்பு பாத்திரத்தில் தான் தண்ணீரை சேமித்து வைத்து குடித்தார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முதலில் தேவையானது குறையாத நீர்சத்து தான். இதை முன்னரே உணர்ந்தால் தான் தண்ணீர் சுவையற்ற பானமாக இருந்தாலும் அதை சத்தான பானமாக மாற்ற செம்பு நீரில் பிடித்து பயன்படுத்தினார்கள்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் செப்புப் பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் சமநிலைப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. தண்ணீரில் இருக்கும் கண்ணு தெரியாத நுண்ணுயிர்கள் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களை கொன்று சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றி தருகிறது. இதன் மூலம் 24 மணி நேரத்தில் சுத்தமான நீராக மாற்றி விட முடியும்.
நன்மைகள்:
1.செரிமானம் சீராகிறது
அதை வைத்து தண்ணீரை குடிப்பதன் மூலம் கேடு தரும் பாக்டீரியாக்கள் அழிந்து வயிற்றில் உண்டாகும் புண்கள் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணமாக அமைகிறது
2.எடை இழப்புக்கு உதவுகிறது
தண்ணீர் குடிப்பதனால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும் ஏனெனில் இது உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைக்கிறது.
3.காயங்களை குணப்படுத்தும்:
செம்பு காயங்கள் விரைவாக காயங்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது ஏனெனில் இதில் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வெளிப்புற காய் மட்டுமில்லாமல் உட்புற காயத்தையும் குணப்படுத்தும்.
4.இதயத்துக்கு நன்மை:
செம்பு பானையில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.
5.புற்று நோய் தடுப்பு:
இதில் உள்ள நல்ல பக்டீரியாக்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
6.தைராய்டு சுரப்பி:
தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
7.மூட்டுகள், கீல் வாதம், முடக்கு வாதம்:
முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்குகிறது ஏனெனில் இதில் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
8.ரத்தசோகை அபாயம் குறைவு:
நமது உடல் உறுப்புகள் செயல்படும் பல துறைகளில் இரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புசத்து அதிகமாக கிடைக்கின்றது.
9.தொற்று நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது:
தொற்று நோயை உண்டாக்கும் ஈகோலை போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகின்றது.
10.சரும பிரச்சினைக்கு:
உங்கள் முகத்தில் கோடுகள் ஏதாவது தோன்றியது போல இருந்தால் அதற்கு தீர்வாக செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து குடிக்க தொடங்கலாம். இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் உயிர் அணுக்களை எதிர்த்து போராடுகிறது. சருமத்தை பளிச்சென்று வைக்க உதவுகிறது.