கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை இலவச டேட்டா வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறுவதால் இணைய வசதிக்காக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு எல்காட் நிறுவனத்தின் மூலம் இலவச டேட்டா கார்டு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் வரை கல்லூரிகள் திறக்கப்பட்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.