Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே போகாதீங்க… மறு அறிவிப்பு வரும் வரை… அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி தொடங்க உள்ளதால், ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு மருந்துகள் அளிப்பதில் சிரமம் என்பது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |