Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று காலை 8 மணிக்கே தொடங்கிருச்சு… உடனே போங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-நாகர்கோவில், சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ரயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16 மற்றும் 17 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-கோவை ரயில் ஜனவரி 13-ஆம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும். கோவையிலிருந்து ஜனவரி 17-ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |