Categories
மாநில செய்திகள்

#அரசியலுக்கு_ வாங்க_ ரஜினி… ரசிகர்கள் அறவழிப் போராட்டம்…!!!

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் அவரின் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அதற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் அனைவரும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ரஜினியின் ரசிகர்கள் தங்கள் அனைவரின் பலத்தையும் காட்டும் வகையில் ஓரிடத்தில் அனைவரும் கூடி ரஜினி அரசியலுக்கு இருப்பதற்காக முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரசிகர்கள் ஒன்றுதிரண்டு அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மத்தியில் #அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Categories

Tech |