Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இது சும்மா ட்ரைலர் தான்…! குவிந்த ரசிகர்கள்…. குலுங்கிய சென்னை… மாஸ் காட்டிய போராட்டம் …!!

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று – நான்கு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சி அமைக்க ஆளும் அதிமுகவும், பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல்…. எப்படியாவது ஆட்சியை பிடித்து கட்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சி திமுகவும் தீவிரமாக தேர்தல் பணியை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,  நாம் தமிழர்,  மக்கள் நீதி மையம் என அடுத்தடுத்த அரசியல் களத்தில் பஞ்சமில்லாமல் கட்சிகள் களத்தில் உள்ளன.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதற்கு ஏற்றார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். டிசம்பர் 31-ஆம் தேதி கட்சிக்கான அறிவிப்பு, ஜனவரி தொடக்கம் என்று ரஜினி அறிவித்திருந்த நிலையில் அவரின் உடல் நலம் காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இது தமிழகம் முழுவதும் ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் இன்று ரஜினி அரசியலுக்கு வர வைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் அமைதிப் போராட்டத்தை ரசிகர்கள் முன்னெடுத்து வருகின்றன. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் – ரசிகர்களும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்  என்ற முழக்கங்களை எழுப்பி, சக்தி கொடு என்ற பாடலை ஒலிக்கச் செய்து ரசிகர்கள் போராட்டம் தொடர்ந்து வருகின்றன.

போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக ரஜினி ரசிகர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி பிறகு போராட்டம் தொடங்கிய வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இப்படி ஒரு போராட்டத்தை யாரும் பார்த்ததுண்டா…. தமிழகத்தில்  அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார் ஒரே போராட்டத்தில் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |